கூடுதல் விலைக்கு மது விற்பனை : ரூ 4.61 கோடி அபராதாமாக வசூலித்த டாஸ்மாக் நிர்வாகம்! - Seithipunal
Seithipunal


கூடுதல் விலைக்கு மது விற்பனை விவகாரம் : தமிழகத்தில் 852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதாமாக டாஸ்மாக் நிர்வாகம் வசூலித்துள்ளது.

இது குறித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், "தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடுதல் விலைக்கு மது விற்பனைக்கு துணை போன 1970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து ரூ. 4.61 கோடிக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாகப் பார் நடத்தியதாகக் கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பார் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாகப் பார் நடத்தி மதுபானம் அருந்த அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASAMC Issue TamilNadu Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->