ஒரு நாளைக்கு 70 லட்சம் மது பாட்டில்! ரூ.250 கோடி வருவாய் - அதிர வைத்த டாஸ்மாக் நிர்வாகம்!
Tasmac Empty Bottle case Madras High Court
வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மதுவை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வதற்கு பதிலாக மாற்று வழி கொண்டுவரவேண்டும். அல்லது அந்த பகுதிகளில் மதுவுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவின் காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால், பத்து ரூபாய் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து, அந்த திட்டத்தை அறிமுகம் செய்தது.
இது குறித்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால் என்ன என்று டாஸ்மார்க் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன்படி பல்வேறு பகுதிகளில் காலி மது பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மனுதாரர்கள் தரப்பு வாதம் வைக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Tasmac Empty Bottle case Madras High Court