தமிழகத்தில் வீடு தேடி மதுவா? டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை  சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு  திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும்  தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும், ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழ்நாடு அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்திருந்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை  ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.

மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும்" என்றும் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமிடப்பட்டு வருவதாக வெளியான தகவலுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மதுவை விற்பனை செய்வது உள்ளிட்ட எந்த புது முயற்சியிலும் இறங்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் திட்டம் இல்லை என்றும், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யுவும் திட்டமிடப்படவில்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac Online Liquor issue TamilNadu Ramadoss PMK 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->