இனி இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்தப் பகுதியை சேர்ந்த, அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை. சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்றும் சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac stores should not be opened on agricultural lands High Court orders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->