டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பேக்கில் ''கட்டிங்'' சரக்கு?  இந்த நிமிடம் வரை... வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் எந்த முடிவும் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

90 மி.லி. டெட்ரா பேக்குகளை விற்பதற்கான முயற்சியோ, கருத்துருவோ தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டெட்ரா பேக்கில் டாஸ்மாக் மது என செய்திகள் பரவிய நிலையில், இந்த நிமிடம் வரை அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும்,  இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டும் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்யத் துடித்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், கள்ளசாராயத்தை ஒழிக்கவும், மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் கடுமையான  பாதிப்புகளும், ஆபத்துகளும்  ஏற்படுவதாகவும், அதைத் தடுக்கவே காகிதக் குடுவைகளில் மதுவை அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், "மதுவின் விலை அதிகமாக இருந்தால் கள்ளச்சாராயத்தை தேடி மக்கள் செல்வார்கள் என்று கூறி குறைந்த விலையில் காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்வதை அனுமதிக்க முடியாது. 

கையடக்க காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்து பள்ளிக் குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுத்தவர் என்ற பழியும், அவப்பெயரும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதை சாத்தியமாக்க மன உறுதியும், அரசியல் துணிச்சலும் தான் தேவை. 

மாறாக, காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை.  எனவே, காகிதக் குடுவையில் 90 மிலி மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில்  முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac Tetra Pack 90ml Alchohol issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->