டீ கடையில்.. நரிக்குறவரின் செயலால்.. தாக்குதல்.! ஓனர் கைது.!
tea shop owner arrested for attacking and abusing a man by castiiest remarks
̓கடலூர் மாவட்டத்தில் தேநீர் கடைக்குள் வந்து தண்ணீர் குடித்ததற்காக நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன். நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த இவர் தனது பேரனுடன் மங்கலம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான ஆப்பிள் என்ற தேனீர் கடைக்கு சென்றிருக்கிறார்.
கடையில் தேநீர் கேட்டுள்ள குப்பன் பிறகு கடைக்கு உள்ளே சென்று தண்ணீர் குடித்திருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த அண்ணாதுரை "நீ எப்படி கடைக்குள் வந்து தண்ணீர் எடுத்து குடிக்கலாம்" என அவரை தகாத சொற்களால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த குப்பன். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தன் மீது தகாத சொற்களை பேசி தன்னை தாக்கிய அண்ணாதுரை மீது மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் டீக்கடை உரிமையாளர் அண்ணாதுரை கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
English Summary
tea shop owner arrested for attacking and abusing a man by castiiest remarks