ஆசிரியர்கள் & பெற்றோர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது! அதிரடி உத்தரவு!
Teachers Parents Students Schools PAATHA POOJA
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
- பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- மாணவர்களின் மன நலம் மற்றும் கௌரவத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது.
- பாத பூஜை தொடர்பாக புகார்கள் கிடைத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும்; அவர்கள் எந்த விதமான அழுத்தத்திற்கும் உள்ளாகக்கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கௌரவத்தை மதிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம் எண்ட்ஸரு சொல்லப்படுகிறது.
English Summary
Teachers Parents Students Schools PAATHA POOJA