பைக்கை திருடி ஆன்லைனில் விற்பனை விளம்பரம் குடுத்த வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புதூர் அருகே  இருசக்கர வாகனங்களை திருடி ஆன்லைனில் விற்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாசில்கான். இவர் திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி பாசில்கான் தனது சொந்தமான விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில்  சென்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இருசக்கரவாகனத்தை  நிறுத்தி விட்டு கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவன் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பெரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் பார்த்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தை திருடி சென்று கோவையை சேர்ந்த காளீஸ்வரன் மூர்த்தி என்பது தெரியவந்தது.

அவர் மார்க்கெட் பக்கத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பேஸ்புக் செயலில் விற்பனை என்று போட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து போலீசார் காளீஸ்வரமூர்த்தியை  கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager was arrested for stealing two wheelers and trying to sell them online near Sriperumbudur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->