கோயில் மாடுகளை பராமரிப்பதற்கு இடவசதி இல்லையெனில் அவற்றை பெறக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு!
Temple cows acquired no space to maintain issue Court orders
கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசு, காளை மாடுகளை பராமரிப்பதற்கான இடவசதி இல்லையெனில், கோயில் நிர்வாகம் அவற்றை பக்தா்களிடம் இருந்து தானமாகப் பெறக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் என்பவர், "திருப்புவனம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசு, காளைகளைப் பராமரிக்க இடம் வழங்க உத்தரவிட வேண்டும்". என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
அன்ஹா மனுவில், திருப்புவனம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பசு, காளை மாடுகளைத் தானமாக வழங்குகின்றனா். இவை பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசு, காளைகளைப் பராமரிக்க இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தானமாகப் பெறப்படும் பசு, காளை மாடுகளை கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். கோயில் நிலங்களை, மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டால் எப்படி இடம் இருக்கும். தானமாகப் பெறப்படும் மாடுகளைப் பராமரிக்க இடம் இல்லையெனில், கோயில் நிா்வாகம் மாடுகள் தானமாகப் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
Temple cows acquired no space to maintain issue Court orders