தற்காலிக தேர்தல் அலுவலகம்! முன் அனுமதி பெற்று அமைக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வேட்பாளர்கள் தங்களது தற்காலிக தேர்தல் அலுவலகத்திற்கு முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களது வேட்பாளர்களுக்கு தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்தால், வழங்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி தற்காலிக தேர்தல் அலுவகத்தை அமைத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு முன்பாக முறையாக விண்ணப்பங்கள் வழங்கி, மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற்று தேர்தல் அலுவலகம் அமைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temporary election office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->