இராஜபாளையம் || உயிரிழந்த துப்புரவு ஊழியர் - மகனுக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள பிற நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த வகையில், இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு 05.12.2023 அன்று வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமனார்.

அப்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காலமான பணியாளரின் மனைவிக்கு ரூ.10,00,000/- நிதியுதவி வழங்கவும் மற்றும் அவரது வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டார். 

அந்த அறிவிப்பின் படி, இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தியின் மகன் கண்ணன் என்பவருக்கு கருணை அடிப்படையில் இராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும், அவரது மனைவி மகேஸ்வரி என்பவருக்கு ரூ.10,00,000/- நிவாரண தொகையினை மின்ன்னு பரிவர்த்தனை மூலம் வங்கிக் கணக்குக்கு 10.01.2024 அன்று அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs compensation and govt job to died cleaning employee d son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->