பொது மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட வாலிபர் - அரிவாளால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை.!! - Seithipunal
Seithipunal


பொது மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட வாலிபர் - அரிவாளால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளை பிளசண்ட் நகர் பகுதியில் பொதுப் பாதையில் நின்ற முருங்கை மரத்தை தீயணைப்பு வீரர் ஆரோக்கிய செல்வன் என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு வெட்டிக் கொண்டிருந்தார். 

இதை மேலபெருவிளைப் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆண்டனி என்பவர் தடுத்து, நிழல் தரும் மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய செல்வன், ஜோசப் ஆண்டனியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரணை செய்து தீர்ப்பு அளித்தார். அதாவது, குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்பு வீரர் ஆரோக்கிய செல்வனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ten years jail penalty to fire man in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->