தவறான செய்தியை வெளியிட்ட 10 யூடியூப் சேனல்கள் - வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை புலனாய்வு அமைப்புகளின் தகவல் படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக சில யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது. 

யூடியூப் சேனல்களில் முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை ஏற்கனவே 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முடக்கப்பட்ட வீடியோக்களில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten youtube channel vedios disable


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->