மாறி மாறி மயக்கம் போட்டு விழுந்த மாணவிகள்! லைமையாசிரியரை கண்டித்து மாணவிகள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


தென்காசியில் அரசு பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழலை உண்டாக்கி உள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

சமீபத்தில் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர்  கொண்டு வந்திருந்த வாசனை திரவிய பட்டாள்  எதிர்பாராத  விதமாக தவறு கீழே விழுந்து உடைந்து அதிலிருந்து வந்த புகை வகுப்பு முழுவதும் பரவி பெரும் நெடியை ஏற்படுத்தியதால் அதிலிருந்து மாணவிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ரசாயனத்தின் நெடி வகுப்பு முழுவதும் பரவியதால் அடுத்தடுத்து தொடர்ந்து 13 மாணவிகள் மயங்கி  விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியத்தை அடுத்து ஆசிரியர்கள் மாணவிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகள் வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வகுப்பறையில் வாசனை திரவியம் கீழே விழுந்து உடைந்ததில் ஏற்பட்ட நெறியில் மூச்சு திணறல் ஏற்படுவதாக தலைமை ஆசிரியரிடமும் வகுப்பு ஆசிரியர்களும் தெரிவித்த போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. 

தங்களை வெளியே அனுப்பவில்லை என்றும் இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என இன்று சுமார்  200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த செங்கோட்டை போலீசார் தலைமை ஆசிரியரிடமும் ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது தொடர்பாக மாணவிகளிடம் போலீசார் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi female students protest against government school principal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->