கள்ளக்குறிச்சியில் பதற்றம்!...விநாயகர் சதுர்த்தி விழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!...62 பேர் கைது! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே  விநாயகர் சதுர்த்தி விழாவின் போது  இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம், கிழக்குமருதூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றபோது, சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி, சிலை சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து, இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் வெடித்த போது, ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், சிலையை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த போலீசார்,   62 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வரும் நிலையில், கிழக்குமருதூர் கிராமத்தில் நிலவும்  பதற்றம் காரணமாக அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in Kallakurichi Clash between two communities during Vinayagar Chaturthi festival 62 people arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->