யாகி சூறாவளி புயலால் நிலைமை மோசம்!...மியான்மரில் 226 பேர் பலி! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருவான யாகி சூறாவளி புயல் பல்வேறு நாடுகளை புரட்டி போட்டுள்ளது. இதில் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம் நாடுகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்றும், அந்தந்த நாட்டு அரசுகள் தெரிவித்தது. 

இந்நிலையில் மியான்மர் நாட்டினை  கடுமையாக தாக்கிய யாகி சூறாவளி புயலால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது.

மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 226 பேர் பலியாகியுள்ளதாகவும், 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The situation is worse due to Cyclone Yagi 226 people died in Myanmar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->