கோவையில் பயங்கரம்!...வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கிய அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கோவையில் வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில், ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில், கடந்த 5 நாட்களாக கோவையில் பிரபல தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும்  நிறுவனங்கள், அவர்களின் உறவினர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ், ஹார்டு டிஸ்குகள் ஆகியவை சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டதாகவும், கணக்கில் வராத வருமானம் பலகோடி ரூபாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

அதே சமயத்தில், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத வருமானம் குறித்து இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகள் எவ்வித தகவலும் வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terror in coimbatore shocking information of rupees 42 crore caught in income tax audit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->