நாளை சென்னையில் சோதனை ஓட்டம்...! போரூர்-பூந்தமல்லி இடையே...? - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கிலோமீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள், ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் வந்துள்ளது. மேலும், பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிற நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் கடந்த மாதம் 20ம் தேதி முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை வெற்றியடைந்தது.

இந்த சூழலில், நாளை பூந்தமல்லி - போரூர் தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.இதில், 9.1 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 10 ரெயில் நிலையங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவையை டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Test run Chennai tomorrow Between Porur Poonthamalli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->