37 வயதில் நீட் தேர்வில் பாஸ்..மருத்துவராகும் தர்மபுரி இளைஞர்.! குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த 37 வயது பிரபு என்ற இளைஞருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் மஞ்சவாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரபு இவருக்கு வயது 37. அரசு பள்ளியில் படித்த இவர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிரபு நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டார்.‌ அதில், இவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. மேலும், அவர் பல் மருத்துவத்திற்கான படிப்பை தேர்வு செய்துள்ளார் என்றும் திருச்செங்கோட்டில் உள்ள சுயநிதி கல்லூரியை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஆய்வகத்தில் வேலை செய்துவந்த பிரபு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tharmapuri young man become MBBS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->