'அந்த ஸ்டாலின் கேட்டார்.... இந்த ஸ்டாலின் செஞ்சாரா....' ஆசிரியர் சங்கத்தின் ஏமாற்றம்?
That Stalin asked did this Stalin do Disappointment of the Teachers Union
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.12,500 தொகுப்பூதியத்தில் 12000 பேர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் உடற்கல்வி 3,700 பேர், ஓவியம் - 3,700 பேர், கம்ப்யூட்டர் அறிவியல் - 2,000 பேர், தையல் -1,700 பேர் ஆசிரியர்கள் உட்பட தொட்டக்கலை, இசை,கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உட்பட பாடங்களுக்கு அவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் கோரிக்கையாக தங்களை பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

செயலாளர் செந்தில்குமார்:
இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் கூறியதாவது, " திமுக தேர்தல் அறிக்கை எண் :153 இல்,' அரசின் அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் ' என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் வாக்குறுதி எண் : 181 இல்,' பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் ' எனத் தனியாக தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2021 செப்டம்பர் 16 நடந்த அரசுத்துறை செயலர்கள் மட்டத்திலான ஆய்வுக் கூட்டத்தில்,' தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக வேண்டும் ' என முதல்வர் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி:
தேர்தலுக்கு முன், ' உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 1-02-2021 ல் தர்மபுரி மற்றும் 6-02-2021 ல் கன்னியாகுமாரியில் நடந்த பிரச்சாரத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுபவர் என்றார். ' திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நிறைவேற்றப்படும் ' என நம்பிக்கை ஏற்படுத்தினார். இவ்வாறு பகுதிநேர ஆசிரியர்களின் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தியும், இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த ஆண்டு தேர்தல் வந்துவிடும் " எனத் தெரிவித்திருந்தார்.
English Summary
That Stalin asked did this Stalin do Disappointment of the Teachers Union