#சேலம் : அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் பணியிடை நீக்கம்..!
The assistant who took bribe in the delivery ward of the government hospital was suspend in salem
சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் வாழப்பாடி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்க்க வந்த பெண்ணின் உறவினரிடம் செவிலியரின் உதவியாளர் ஒருவர் ரூபாய் 1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் பணத்தை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால்தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்று வசூலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இது குறித்து மருத்துவமனை டீனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தியதில், செவிலியரின் உதவியாளர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதைத்தொடர்ந்து, பிரசவ வார்டில் லஞ்சம் வாங்கிய செவிலியரின் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டார்.
English Summary
The assistant who took bribe in the delivery ward of the government hospital was suspend in salem