மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்! இடிக்கும் பணி தொடக்கம்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்தின் அருகே கட்ராபாளையம் தெருப்பகுதியில் தனியார் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இதில் கீழ் பகுதியில் மருந்தகம் மற்றும் அடுத்தடுத்து கடைகள் உள்ளன.

இந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் முதல் மற்றும் 2-வது தளத்தில் உள்ளன. இங்கு மதுரை மட்டுமின்றி பல மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி வேலை பார்த்தும், கல்லூரிகளில் படித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் அந்த விடுதியின் ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ்  திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த விடுதியில் தீ விபத்து  ஏற்பட்டது. அங்கு மிகவும் குறுகலான அறைகள் என்பதால், அனைத்து அறைகளுக்கும் தீ பற்றி கரும்புகை பரவயுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்து தீயில் மாட்டிகொண்டவர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்கள் பரிமளா, சரண்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சு விடமுடியாமல் உயிரிழந்தனர்.

மேலும், தீக்காயம் அடைந்த 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தீ விபத்து நடந்த பெண்கள் தங்கும் விடுதி 3 தளங்கள் கொண்டுள்ளது. இந்த கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . இந்த கட்டடத்தை இடிக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு  அந்த கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The building where there was a fire in Madurai Demolition begins


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->