சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்..!
The Chief Minister wished the Superstar a happy birthday
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
தமிழ்திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினி காந்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும், திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
The Chief Minister wished the Superstar a happy birthday