கர்ப்பிணிப் பெண் நேர்ந்த கொடுமை! சரிப்பட்டு வராது கீழே இறங்கு! கர்ப்பிணிப் பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு கண்டக்டர்!
The conductor dropped the pregnant woman in the middle of the road
தஞ்சாவூர் : பேருந்தில் சரியான சிலரை கொடுத்ததால் கர்ப்பிணிப் பெண்ணை நடுவழியில் நடத்துனர் கீழே இறக்கிவிட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரிலிருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து பாதி தூரம் சென்றவுடன் பஸ் கண்டக்டர் அந்த கர்ப்பிணி இடம் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
உடனே அந்த கர்ப்பிணி பெண் ரூ.500 குடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர் சரியான சில்லறை கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த கர்ப்பிணியோ தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
அதைக் கேட்ட அந்த தனியார் பஸ் கண்டக்டர் சரியான சில்லறை இல்லாவிட்டால் கீழே இறங்குமாறு அந்த கர்ப்பிணி பெண்ணிடம் கூறியுள்ளார்.அந்த பஸ் பசுபதி கோயில் என்ற இடத்தை சென்றபோது அந்த கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் கீழே இறக்கி விட்டுள்ளார். நடுரோட்டில் கண்டக்டர் இறக்கி விட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் பரிதவித்துள்ளார்.
பஸ்சில் டிக்கெட்டுக்கான சரியான சில்லறையை கொடுத்ததால் கர்ப்பிணியை நடுவழியில் பேருந்தில் இருந்து கண்டக்டர் இறக்கி விட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
English Summary
The conductor dropped the pregnant woman in the middle of the road