காதல் திருமணம் செய்ததால் வரதட்சணை தரவில்லை.. மருமகள், பேரன் மீது தீவைப்பு.. குழந்தை பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


வரதட்சணை வாங்கி தராததால் மருமகள் மற்றும் பேரன் மீது தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் நாராயணன் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் அதே பகுதியை சேர்ந்த சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் கிடைக்கவில்லை என அருண்பாண்டியன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வரதட்சணை கேட்டு பெரியகருப்பன் அவரது மனைவி ஓச்சம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் சிவபிரியாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில்,  சம்பவத்தன்று பெரிய கருப்பனுக்கும் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் மற்றும் இரண்டு வயது பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

 சிவபிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவ பிரியாவிடம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். அதில் அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும் தன் மீதும் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The daughter-in-law set fire to the grandson as the dowry was not paid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->