அதிர்ச்சி! மக்களே உஷார்! இரண்டு வீடு கதவுகள் உடைப்பு! நகை,பணம் கொள்ளை! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அடுத்த ஆலங்குடி புது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை அருகே உள்ள கல்விராயன் பேட்டையில் நடத்தினார். நிகழ்ச்சி முடிந்து  இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கேயே தங்கி உள்ளனர்.

இந்தநிலையில், இதனை நோட்டுமிட்ட மர்ம நபர்கள் இளங்கோவனின் வீடு கதவை உடைத்து 20 கிராம் தங்க செயின், 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இளங்கோவனின் எதிர்வீட்டில்  முன்பக்க கதவையும் உடைத்து ரூ.4000 பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இளங்கோவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். தகவரின் பெயரில் அங்கு சென்ற இளங்கோவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தநிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு வீடுகளையும் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகிறார்.கொள்ளை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The doors of two successive houses were broken open and jewelry and money stolen near Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->