சென்னையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.! 3 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 10-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென தனியார் தொழிற்சாலையில் 60 அடி நீளம் உள்ள சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

இதில் மூன்று தொழிலாளிகள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The factory wall collapsed and crashed in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->