போர் சூழல் தணிந்து மீண்டும் உக்ரைன் செல்லும் மாணவர்களின் செலவை அரசு ஏற்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை..!
The government must accept the cost of students returning to Ukraine after the war has subsided
போர் முடிந்து மாணவர்கள் உக்ரைன் செல்லும் செலவையும் அரசே ஏற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு பயிலும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய மாநில அரசுகள் முயற்சிசெய்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் போர் பதட்டம் தணிந்து மீண்டும் அங்கு செல்லும் செலவையும் அரசு ஏற்க வேண்டும் என மகக்ள் மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது,
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
உக்ரைன் போர் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்திய மாணவர்கள் பட்ட சிரமம் வருத்தத்திற்குரியது. இப்பொழுதேனும் மீட்பு நடவடிக்கையில் அவர்களின் பயணச் செலவை மத்திய, மாநில (தமிழக) அரசுகள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
இந்தியா திரும்பும் செலவை இரு அரசுகளும் ஏற்கும் என்றாலும், உக்ரைனில் மறுபடியும் தங்கிப்படிக்கும் சூழல் உருவானபின் அங்கு திரும்பிச் செல்லும் செலவை யார் செய்வது என்பதே நடுத்தர மாணவர்களின் கேள்வி. ஆக இவ்விரு அரசுகளும் இந்தச் செலவையும் ஏற்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The government must accept the cost of students returning to Ukraine after the war has subsided