88 வயது பாட்டிக்கு வராத பென்ஷன்... 'அலேக்காக' தூக்கி ஓடிச்சென்று கலெக்டரிடம் மனு.! பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பாட்டிக்கு முதியோர் உதவித் தொகை வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாட்டியை இளைஞர்கள் தூக்கி கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சஞ்சீவராயன் பேட்டையைச் சார்ந்த 88 வயது மூதாட்டி செல்லம்மாள். இவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் பாட்டி செல்லம்மாள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக பார்த்திபன் என்ற நபர் பாட்டிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் செல்லம்மாளை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்ற பார்த்திபன்  அவரை தூக்கிச் சென்று  கைகளில் சுமந்து சென்ற வாரே  கலெக்டரிடம் மனு அளித்தார். இளைஞர் ஒருவர் பாட்டிக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்க வேண்டிய அந்தப் பாட்டியை தூக்கி கொண்டே வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the man who carried his the oldl lady to the Salem District Collectorate and filed a petition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->