காஞ்சிபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன்(75). இவர் வீட்டிலிருந்து ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வெள்ளைகேட் வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The old man who fell into the abyss died in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->