26 முறை வானில் வட்டமடித்த விமானம்!...144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு பாராட்டு! - Seithipunal
Seithipunal


திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்ற நிலையில், விமானம் மேலே எழும்பியதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை.

இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், விமானத்தின் எரிபொருள் தீரும் வரை விமானம் வானில் வட்டமடித்தது. தொடர்ந்து, விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்தது. பின்னர் விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இந்த விமானத்தை விமானி இக்ரம் ரிபத்லி, சக விமானிகள் மைத்ரி ஶ்ரீகிருஷ்ணா, லைஷ்ராம் சஞ்சிதா தேவி, உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், பயணிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்து, சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினர்.

விமானம் தரையிறங்கியபோது திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளின் உறவினர்கள், விமான பயணிகள் கரகோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், 144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு  சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The plane circled the sky 26 times kudos to the team of pilots who saved the lives of 144 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->