முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை; தமிழக அரசு பதில் மனு..! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் எஃப்ஐஆரை போலீஸார் வெளியிடவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், எஃப்.ஐ.ஆரில் பதிவான மாணவி தொடர்பான விவரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட மாணவியின் முதல் தகவல் அறிக்கை விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்யவோ முடியாதபடி காவல்துறை முடக்கியுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா என்று தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை ஏற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் இன்றே விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதன்படி இன்று மதியம் 2.15 மணிக்கு பிரதிவாதிகளான உள்துறை செயலாளர், மாநகர காவல் ஆணையர், பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர் மகளிர் போலீஸார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த நிலையில் இன்றைய தினம் மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் எஃப்ஐஆரை காவல் துறை வெளியிடவில்லை என்றும் இணையத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police did not publish the first information report in the Anna University student case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->