மக்களே உஷார்! வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்!!
The roof of the house collapsed and the old woman was seriously injured
சென்னை மயிலாப்பூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் . வீட்டின் மேற்கூரை இடிந்து விழுவது இரண்டாவது முறை என தகவல்.
சென்னை மயிலாப்பூர் வாரன் சாலை விசாலாட்சி தோட்டத்தில் தமிழக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் உள்ளது அங்குள்ள ஈசட் பிளாக் குடியிருப்பில் அலமேலு (63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை அலமேலு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து அவர் மேல் விழுந்தது. அதில் அலமேலு காலில் பலத்த காயம் ஏற்பட்டது அவர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அலமேலு வீட்டில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது இந்த கட்டிடம் கட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது முறையான பராமரிப்பு இல்லாததால் இங்கு உள்ள அனைத்து வீடுகளும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றன. மக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கூறினர். தற்போது மேற்கூரை இடிந்து விழுந்த மூதாட்டி காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பது விசாலாட்சி தோட்டத்தில் தமிழக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The roof of the house collapsed and the old woman was seriously injured