பள்ளிக் கல்வித்துறை அதிரடி!...மாதந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி செங்கல்பட்டு மாவட்டத்திலும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மதுரை மாவட்டத்திலும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் உள்பட பல்வேறு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 30 அதிகாரிகள், மாதத்தில் ஒருமுறையாவது பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாதத் தொடக்கத்தில் 5-ம் தேதிக்குள் தவறாமல் அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆய்வில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம் என்றும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மாணவர்கள் இடைநிற்றல், வட்டார கல்வி அலுவலகங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்கள் என பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The school education department is in action Monthly monitoring officers are appointed to inspect the schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->