#விழுப்புரம்.! குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் சூடான ரசத்தை ஊற்றிய மனைவி.!
The wife who poured hot rasam on the face of her drunken husband
விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் மனைவி சூடான ரசத்தை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். நடராஜன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி குப்பம்மாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குப்பம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் இரண்டு முறை நடராஜனை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு நடராஜன் மீண்டும் குடிபோதையில் வந்து மனைவி குப்பம்மாளிடம் தகராறு செய்ததால், நடராஜனின் முகத்தில் சூடான ரசத்தை குப்பம்மாள் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வெந்துபோன முகத்துடன் நடராஜன் காவல் நிலையம் சென்ற நிலையில், அவரை சமாதானப்படுத்தி போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The wife who poured hot rasam on the face of her drunken husband