வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் திரையரங்கம் - தமிழக அரசு அறிவிப்பு.!
Theatre in vandalur zoological park
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.
இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா திரையரங்கம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை பொதுமக்களிடம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.4.3 செலவில் புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம் வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியியுடன் விளக்க வளாகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Theatre in vandalur zoological park