தியேட்டர்களின் பார்க்கிங் கட்டணம் உயர்கிறது.? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Theatre parking Fees May Hike
செல்போன், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத போது மக்களுக்கு பொழுதுபோக்கு தளமாக இருந்தது திரையரங்குகள் தான். இந்த திரையரங்குகளின் சேவை தற்போது வரை நீடிக்கின்றது. சமீபத்தில் கொரோனா பரவலின் காரணமாக தியேட்டர்களின் நிலை மோசமானது.
மக்கள் ஓடிடி தளங்களில் படம் பார்க்க தொடங்கியதால், தியேட்டர்களின் நிலை தற்போது வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஒரு சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் லாபத்தை கொடுக்கிறது. பெரும்பாலும் மக்கள் தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் வழக்கம் மாறிவிட்டது.
சென்னையில் இருக்கும் ராயப்பேட்டை திரையரங்கம் சார்பில் கடந்த 2017-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், "திரையரங்குகளில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும்." என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அப்போதைய விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதன் மீதான மேல்முறையீட்டில், தற்போது தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், 'வாகன நிறுத்த கட்டணத்தை அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.' என்று தெரிவித்துள்ளது. அத்துடன், 'பார்க்கின் கட்டணம் நியாயமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Theatre parking Fees May Hike