காதல் ஜோடிக்கு திமுக பிரமுகர் தலைமையில் திருமணம்.. தீ வைத்து காரை கொளுத்திய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூர் அருகே பாண்டி என்ற நபருக்கு 24 வயதில் மல்லிகா என்ற பெண் இருக்கின்றார். மல்லிகா கூழையனூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் 28 வயது மகன் தினேஷ்குமாரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இருவரது காதலுக்கும் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டை விட்டு வெளியேற காதல் ஜோடி முடிவு செய்தது. இதனை தொடர்ந்து திமுக பிரமுகரான சந்திரசேகரின் உதவியை அந்த காதல் ஜோடி நாடியுள்ளது. அவரும் அந்த காதல் ஜோடியை அழைத்துச் சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார். 

பின்னர், காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு சென்றனர். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மணமக்கள் இருவருமே மேஜர் என்பதால் அவர்கள் விருப்பம் பல வாழலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

பின்னர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் நின்று இருந்த திமுக பிரமுகர் சந்திரசேகரின் காரை பெண்ணின் வீட்டினர் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளனர். கையில், கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை ஊற்றி, அதில் தீ வைத்து எரித்த மல்லிகாவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பித்து ஓடி விட்டனர். 

இதனால், கார் தீ பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சியடித்து சந்திரசேகரின் காரை காப்பாற்றினார். ஆனால் அதற்குள் கார் முழுவதிலும் பற்றி எரிந்து நாசமானது. இது குறித்து சந்திரசேகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் என்ற மல்லிகாவின் அண்ணனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni dmk admin car fired


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->