தேனி | செய்யாத தவறுக்கு தண்டனை - அவமானத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


தேனி, போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது 29) இவர் கோவையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

இவருடன் சிவா என்பவர் வசித்து வந்தார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் இளம் பெண் ஒருவர் அவரது குடும்பத்துடன் இருந்தார்.  இளம்பெண் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ கதவு தட்டியுள்ளனர். 

வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லாததால் இது குறித்து அவரது பெற்றோர் வந்ததும் அவர்களிடம், யாரோ வந்து கதவை தட்டினார்கள் என்றும் மேல் மாடியில் வசிப்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பாரதி கணேஷ் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை அவர்களது வீட்டிற்குள் மறைத்து நிறுத்தினர்.

பின்னர் பாரதி கணேஷ் தனது இரு சக்கர வாகனத்தை கொடுக்கும்படி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். 

அப்போது ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் பாரதி கணேஷிடம் எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டுள்ளனர். 

அதற்கு பாரதி கணேஷ் நான் கதவை தட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் 3 பெரும் சேர்ந்து பாரதி கணேஷை கட்டையால் தாக்கியுள்ளனர். 

இது தொடர்பாக பாரதி கணேஷ் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு, அவமானம் தாங்காமல் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து அறிந்த சிவா. அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலில் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பாரதி கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni teenager commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->