தென்காசி :  புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி வெடித்து.. பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் கிணறு வெட்டும் பணியை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பணியாளர்கள் கிணறு வெட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பாறையை தகர்ப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும், பலத்த காயம் அடைந்த 3 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு தொழிலாளியும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் விவசாய நிலத்தின் உரிமையாளர் பாலுவுடன் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.

இந்த நிலையில் 2 தொழிலாளிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கிணறு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi puthupatti well cracker accident 3 workers death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->