தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் - சிறுவர்களிடம் போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று பகுதில் இறால் பிடிப்பதற்காக சென்ற சிறுவர்களிடம் காவல்துறை மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்துள்ளன. 

தென்பெண்ணை ஆற்று பகுதியில் புதுச்சேரி கும்தாமேடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் நேற்று மாலை இறால் பிடித்துக் கொண்டிருந்தனர். .

அப்போது அவர்களிடம் காவல்துறை மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகள் குண்டுகள் 100க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த கடலூர் போலீசார் சிறுவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். 

மேலும் சிறுவர்களிடம் இருந்த 160 க்கும் மேற்பட்ட பெரிய துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இவை அனைத்தும் போலீஸ் மற்றும் தனியார் பயன்படுத்தும் குண்டுகள் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுவர்களிடம் கடலூர் எஸ்.பி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்த சம்பவம் கடலூர், புதுச்சேரி போலீசாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்துள்ள குண்டுகள் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் தனியார் துப்பாக்கி குண்டுகளும் உள்ளதால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenpennai River found Bullets  Police investigate 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->