கோவில் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக்கூடாது என மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தமிழ்ச்செல்வி பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There should be no pornography in dance and song performances High Court order


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->