பரபரப்பாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி - இதுவரைக்கும் 35 பேர் படுகாயம்.!
thirty five peoples injured for palamedu jallikattu
பொங்கல் பண்டிகை என்றால் இளைஞர்களின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டம் மதுரை. அங்கு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடத்தில ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாளைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் இதுவரை 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன . 8 சுற்றுகளில் மொத்தமாக 714 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
thirty five peoples injured for palamedu jallikattu