சங்கரன் கோவில் - நாய் கடித்து முப்பத்திரெண்டு ஆடுகள் பலி.! - Seithipunal
Seithipunal


சங்கரன் கோவில் - நாய் கடித்து முப்பத்திரெண்டு ஆடுகள் பலி.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே செந்தட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் செந்தட்டிக்கும் வேப்பங்குளத்திற்கும் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் ஆட்டிற்கான கொட்டகை அமைத்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் இன்று வழக்கம் போல் கொட்டகைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முப்பத்து இரண்டு ஆடுகள் நாயால் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. இதையடுத்து அவர் ஆடுகள் திருட்டைத் தடுக்கும் நோக்கத்தில் கொட்டகையில் வைத்திருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளைப் பார்த்தார். 

அந்தக் காட்சியில், நள்ளிரவில் கூட்டமாக வந்த நாய்கள் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாகக் கடித்தது பதிவாகி இருந்தது. உயிரிழந்த ஆடுகளில் 24 செம்மறி ஆடுகளும், எட்டு வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் ஒன்பது ஆடுகள் நாய் கடித்ததில் பலத்த காயமடைந்துள்ளன. 

அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும், பக்கத்து தோட்டங்களில் வளர்க்கும் நாய்களின் தொல்லையாலும் தான் இந்த அசம்பாவிதங்கள் நடப்பதாக அப்பகுதி கால்நடை வளர்ப்போர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirty two goats died for bit dog in sangaran kovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->