பக்தரை ஏமாற்றிய அர்ச்சகர்.? தட்டிக்கேட்ட போலீஸை.. கூட்டாக சேர்ந்து தாக்கிய அர்ச்சகர்கள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்த நிலையில், கோவில் அர்ச்சகர்கள் அவர்களை சட்டையை பிடித்து தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனை பயன்படுத்தி அர்ச்சகர்கள் மூத்த குடிமக்கள் செல்லும் பாதையில் பணத்தை வாங்கிக் கொண்டு பக்தர்களை அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதை போலீசார் தடுக்க முயற்சித்த போது அர்ச்சகர்கள் ஒன்றாக சேர்ந்து போலீசை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு அர்ச்சகர் அழைத்துச் செல்லாத காரணத்தால் அர்ச்சகரிடம் பக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை அவர் திரும்பப்பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அர்ச்சகர்களின் இந்த மோசமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruchendhur archagarkal attacked police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->