பிஞ்ச செருப்பால அடிக்க போறாங்க., ஜாக்கிரதையா இருங்க - திமுக கவுன்சிலரின் அதிர்ச்சி ஆடியோ.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் : திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியின் ஒரு சில வார்டுகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து திருச்செந்தூர் நகராட்சியின் மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவர், வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட ஆடியோ ஒன்று, திருச்செந்தூர் பகுதியில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அவரின் அந்த ஆடியோ பதிவில், "மக்கள் அனைவரும் நம்மளை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவா நகருக்கு தண்ணீர் கொடுத்து பத்து நாட்கள் ஆகிறது. அவர்களுக்கு நம்மால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. கேட்டால் நகராட்சியில் இருந்து சரியான பதில் இல்லை.

ஏதோ திறந்து வீட்டில் நாய் வந்தது போல, ஏதோ வருகிறது, ஏதோ போகிறது என்பது போல, எப்போது தண்ணீர் வருகிறது, எப்போது போகிறது என்று தெரியவில்லை என்று, மக்கள் நம் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது, தண்ணீர் பைப் உடைந்து விட்டது இப்படி காரணங்களை நாம் சொன்னால், அவர்கள் பிஞ்ச செருப்பை எடுத்துக் கொண்டு நம்மை அடிக்க தயாராக இருக்கின்றனர்.

இது நிர்வாக சீர்கேடா? இல்லை கடவுளுடைய சோதனையா? இல்லை திமுக கவுன்சிலர்கள் நாங்கள் வெற்றி பெற்று வந்ததால் வந்த தரித்திரியமா? ஒன்றும் தெரியவில்லை. 

திமுகவினர் வெற்றி பெற்று வந்தார்கள், தண்ணீர் வரவில்லை என்று, மக்கள் திட்ட ஆரம்பித்து விட்டனர். அனேகமாக நம் மீது (திமுக கவுன்சிலர் ஆகிய நம் மீது) கல்லைக் கொண்டு எறிவார்கள் என்று தெரிகிறது.

அவர்களுக்கு (மக்கள்) நாம் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. அவர்களின் தேவையை நம்மால் செய்ய முடியவில்லை. கூடிய சீக்கிரம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து, நம்மை நம் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். முடிந்தால் மக்களுக்கு தண்ணீர் வழங்குங்கள். இதற்கான நடவடிக்கை எடுங்கள்" என்று அந்த குரல் பதிவில் திமுக வார்டு கவுன்சிலர் ரூபன் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruchendur dmk counselor audio


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->