தைத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த ஏராளமான பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் சிறப்பு பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

தை திருநாளான இன்று அதிக அளவில் பக்தர்கள் கூடியதால் நள்ளிரவு 1 மணியளவில் நடைபாதை திறக்கப்பட்டது. இந்த தைத்திருநாளை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக திருநெல்வேலி, ராஜபாளையம், விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். 

மேலும் அவர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரை கடலில் புனித நீராடி தைதிருநாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் வீடுகளுக்கு சென்று பொங்கல்  வைப்பது வழக்கம்.

அதனால் இன்று அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur today gathered large number devotees  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->