டாஸ்மாக் மூலம் தமிழக அரசு தனது வருமானத்தை பெருக்குவது மக்கள் விரோதச் செயல் - திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


மதுபான கடைகள் மூலம் தமிழக அரசு தனது வருமானத்தை பெருக்க மாவட்ட ஆட்சியரை மாதந்தோறும் ஆய்வுக்கூடம் நடத்த செயல்பட வைப்பது, தமிழக அரசு மக்களுக்கு செய்யும் விரோதச் செயல் என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

இன்று தனது முகநூல் பக்கத்தின் நேரலையில் பூரண மதுவிலக்கு குறித்து திருமாவளவன் பேசியதாவது, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த போது, ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராயத் தொழில் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அரசு மதுபான கடைகளை மூட வேண்டும்  என்றும் தெரிவித்தனர். 

கள்ளச்சாராய விற்பனை பட்டியலினத்தவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை குறிவைத்து நடந்து வருகிறது. நாம் தேசிய அளவில் மதுவை ஒழிப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். வருமானம் பெருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரை செயல்பட வைப்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் விரோதமான செயலாகும். மது விற்பனை குறித்து மாதந்தோறும் ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதெல்லாம் தேவையற்றது. 

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று சென்னையில் நாளை பூரண மது விளக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பூரண மது விலக்கு சம்பந்தமாகவோ, மதுபான கடைகளை அடைப்பது சம்பந்தமாகவோ அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேசவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுகவை எப்படி விமர்சிப்பது என்பதே அவர்களுடைய முழு நோக்கமாகும். மேலும், விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் ஏன் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். திமுகவின் கூட்டணியை பலவீனப்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan Condmen to TN Govt for TASMAC Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->