#தமிழகம் || கழிவறையில் தொப்புள் கொடியுடன் குழந்தையை போட்டுச்சென்ற கொடூர தாய் ஷாஜா பானு என்ற கீதா.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் : தனியார் மருத்துவமனை ஒன்றில் கழிவறைக்குள் சென்ற பெண் ஒருவர், அரை மணி நேரத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்ற நிலையில், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே எம் எம் ஆர் வி என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கழிவறையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசு ஒன்று சடலமாக கிடந்த உள்ளது.

இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பெண் சிசுவின் உடலை கைப்பற்றிய போலீசார், இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில், சிசிடிவி கேமரா காட்சியில் இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து இறங்குவது பதிவாகியிருந்தது.

மேலும், அரைமணி நேரம் கழித்து அந்த பெண் சாதாரணமாக நடந்து வந்து ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, அந்த பெண் யார் என்று விசாரணை செய்ததில், அந்தப் பெண் பூண்டி பகுதியை சேர்ந்த ஷாஜா பானு என்ற கீதா என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளதும், அவர் கணவரை பிரிந்து வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், இந்த குழந்தை உருவாக்கியதும் தெரியவந்தது.

மேலும் இந்த குழந்தை அவமானமாக போய்விடும் என்று கருதி அந்த குழந்தையை மறைப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து கழிவறையில் குழந்தையை பெற்று, அங்கேயே தொப்புள் கொடியுடன் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கீதாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvallur police arrest keetha for child dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->