விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மழை - திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvallur university exams postpond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->